Friday 4 September 2015

ஒளிக்கதிரோனுக்காய் மட்டுமே...

















தாமரைச் செண்டுகள்
சுற்றும் கரு வண்டுகள்
ஒற்றைக்காற் பிடிவாதம்
கற்றை ஒளிக்கதிரோனுக்காய் மட்டுமே...

ஒரு கணம் மலர்ந்து
மறு கணம் இறந்து
மறுபடி பிறந்து
திரும்பவும் மலர்ந்து
மாசற்ற தாமரை நெஞ்சம்
கற்றை ஒளிக்கதிரோனுக்காய் மட்டுமே...

---கீர்த்தனா--- 

15 comments:

  1. கற்றை ஒளிக் கதிரோனுக்கான காத்திருப்பு மிக அருமை!
    உள்ளம் தொட்டுச் சென்றது உங்கள் கவிதை சகோதரி!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பு வருகைக்கும் தொடர் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி சகோதரி!

      Delete
  2. ஒரு கணம் மலர்ந்து
    மறு கணம் இறந்து
    அருமையான வரிகள் சகோ மிவும் ரசித்தேன் நானும் ஏதோ இதைப்போல ஒன்று எழுதி இருக்கிறேன் பார்த்து விட்டு சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோதரா! என்ன தலைப்பில் உங்கள் பதிவு உள்ளது என்று தெரியப்படுத்தினால் தேடிப்படிக்க இலகுவாக இருக்கும் சகோதரா!

      Delete
  3. அருமையான தாமரையின் காத்திருப்புக்கவிதை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தம்பியின் தொடர் வருகையும் ஊக்குவிப்பும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றி தம்பி!

      Delete
  4. அருமையான பகிர்வு சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரா!

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வாழ்வின் தத்துவத்தை,அநித்தியத்தை
    அழகாக எடுத்துரைத்தது

    நீங்களா அல்லது அந்த
    நீண்ட ஒரு இளம் தண்டிலே
    நர்த்தனமாடும்
    கமலமா ?

    ஹம்சா நந்தி ராகத்தில் நன்றாக வருகிறது.
    பாடட்டுமா?

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் அன்புநன்றி சுப்புத்தாத்தா அவர்களே! கேட்க வேண்டுமா அழகாகப் பாடுங்கள் சுப்புத்தாத்தா ! :)

      Delete

  7. வணக்கம்!

    தாமரைப் பூவழகு! பாமரைச் சீர்காட்டும்!
    மாமரைச் செல்வி வரம்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆசிரியர் ஐயா!
      தங்கள் வரவால் இந்த வலைப்பூ ஆசீர்வதிக்கப்பட்டது! மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்! மனமார்ந்த நன்றி ஐயா!
      அன்புடன்
      கீதா ரவி

      Delete
  8. கவிதை அருமை அற்புதம். எனது தளம் வந்து மிளகு காளானை ருசிக்க வாருங்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சகோதரி!

      Delete